Home நாடு பிடிபிடிஎன் கடன்: கறுப்புப் பட்டியலில் இருந்து 400,000 பெயர்கள் நீக்கம்!

பிடிபிடிஎன் கடன்: கறுப்புப் பட்டியலில் இருந்து 400,000 பெயர்கள் நீக்கம்!

792
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிடிபிடிஎன் (National Higher Education Fund Corporation) கல்விக் கடன் தொடர்பில் 400,000 நபர்களின் பெயர்கள் குடிநுழைவு இலாகாவின் பயணத் தடைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அக்கறுப்புப் பட்டியலில் இருந்து அவர்கள் அனைவரின் பெயரும் நீக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் ஜான் கூறுகையில், 429,945 கடன் பெற்றவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டியலில் இருந்து ‘வெள்ளைக்கு’ ஜூன் 8-ம் தேதியே மாற்றப்பட்டது எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மலேசியர்களுக்கு பக்காத்தான் அரசாங்கம் அளித்த 100 நாள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வான் சைபுல் ஜான் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், கல்விக் கடன் பெற்றவர்கள் அவர்களது சேவையைத் தொடரலாம் என்றும் வான் சைபுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.