Home உலகம் உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 0 – டென்மார்க் 0 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 0 – டென்மார்க் 0 (முழு ஆட்டம்)

952
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் 26 ஜூன் இரவு 11.55) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய ‘சி’ பிரிவுக்கான 2 ஆட்டங்களில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், தென் அமெரிக்க நாடான பெருவும் மோதின. இதில் பெரு 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் அந்த இரு நாடுகளுமே இரண்டாவது சுற்றுக்குச் செல்ல முடியாது.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்சும் டென்மார்க்கும் மோதியதில் இரண்டு நாடுகளுமே கோல்கள் எதுவும் அடிக்க முடியாமல் 0-0 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டன.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் 7 புள்ளிகளுடன் ‘சி’ பிரிவில் முதல் நிலையைப் பிடித்தது. இரண்டாவது நிலையில் 5 புள்ளிகளுடன் டென்மார்க் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறது.

எனவே பிரான்ஸ்-டென்மார்க் இரண்டு நாடுகளுமே இரண்டாவது சுற்றுக்குச் செல்கின்றன.