Home உலகம் உலகக் கிண்ணம் : பெரு 2 – ஆஸ்திரேலியா 0 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம் : பெரு 2 – ஆஸ்திரேலியா 0 (முழு ஆட்டம்)

907
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் இரவு 11.50 மணி நிலவரம்) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று நடைபெறும் 4 ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், தென் அமெரிக்க நாடான பெருவும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்டத்தின் முடிவில் பெரு 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் தகுதியை இந்த இரண்டு நாடுகளுமே இழந்துள்ளன.

‘சி’ பிரிவில் இந்த இரு நாடுகளும் இடம் பெற்றிருந்தன. பெரு நாடு இதுவரை எந்தப் புள்ளியும் பெறாமல் கடைசி நிலையில் இந்தப் பிரிவில் பின்தங்கி இருந்தது. எனவே இந்த ஆட்டத்தில் வென்றாலும் தோற்றாலும் பெரு அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியாது.

ஆஸ்திரேலியாவோ ஒரே ஒரு புள்ளியைப் பெற்று மூன்றாவது நிலையில் இருந்து வந்தது. ஒருக்கால் பெருவை ஆஸ்திரேலியா வெற்றி கொண்டிருந்தால் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் அதன் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கலாம்.

ஆனால் பெருவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது சுற்றுக்குச் செல்ல முடியாமல் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

பிரான்ஸ், டென்மார்க் ஆகிய இரு நாடுகளும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகின்றன.