Home நாடு “மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல்” – அமார் சிங் அறிவிப்பு!

“மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல்” – அமார் சிங் அறிவிப்பு!

1259
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பான விசாரணையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆபரணங்களும், ஆடம்பரப் பொருட்களும் மலேசிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய பறிமுதல் என புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணைத் துறை இயக்குநர் ஆணையர் டத்தோஸ்ரீ அமார் சிங் தெரிவித்திருக்கிறார்.

“ஆமாம்.. நாங்களே அதிர்ச்சியடைத்தோம். மலேசிய வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய பறிமுதல். முன்னாள் பிரதமருடன் தொடர்புடைய இரு புத்ராஜெயா இல்லங்களிலும், 4 கோலாலம்பூர் இல்லங்களிலும் கடந்த மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

“அவைகளில் புத்ராஜெயாவில் இருக்கும் ஸ்ரீபெர்டானா அலுவலகமும் ஒன்று. மேலும், பெவிலியன் ரெசிடென்செசில் இருந்த 3 வீடுகளிலும், லங்காக் டூத்தாவில் இருந்த (நஜிப்பின்) தனிவீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அமார் சிங் நேற்று புதன்கிழமை அறிவித்தார்.

#TamilSchoolmychoice