Home நாடு சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகினார்

சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகினார்

1006
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு காலத்தில் ஜோகூர் மாநிலத்தின் வலிமைமிக்க அம்னோ தலைவர்களில் ஒருவராகவும், அமைச்சராகவும் வலம் வந்த டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சியில் தான் இணையவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

பல்லாண்டு காலம் அம்னோவின் வழி தான் அரசியல் பணியாற்றி வந்தாலும், அன்று தான் பார்த்த அம்னோ இதுவல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக சைட் ஹமிட் அல்பார் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

வெளியுறவு அமைச்சராகவும் வேறு சில அமைச்சுப் பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ள அவர் மலேசியத் தரைப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகவும் சில காலம் செயலாற்றி வந்தார்.

ஜோகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு வழக்கறிஞரான சைட் ஹமிட் அல்பார் சில தவணைகள் இருந்திருக்கிறார்.

ஹமிட் அல்பாரின் தந்தையார் டான்ஸ்ரீ சைட் ஜபார் அல்பார் ஒரு காலத்தில் அம்னோவின் முக்கியத் தூண்களில் ஒருவராகவும் அம்னோ தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவராவார். பல சமயங்களில் அம்னோவைத் தீவிரமாகத் தற்காத்த சைட் ஜபார் அல்பார் “அம்னோவின் சிங்கம்” என வர்ணிக்கப்பட்டவராவார்.

அவரது வழியில் ஜோகூர் அம்னோ அரசியலில் முக்கிய இடம் வகித்த சைட் ஹமிட் அல்பார் தற்போது அம்னோவிலிருந்து விலகியுள்ளார்.