Home உலகம் குரோஷியா டென்மார்க்கைத் தோற்கடித்தது (பினால்டிகளில் வெற்றி)

குரோஷியா டென்மார்க்கைத் தோற்கடித்தது (பினால்டிகளில் வெற்றி)

1217
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று ஞாயிற்றுக்கிழமை (1 ஜூலை) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் – குரோஷியா ஆகிய நாடுகள் மோதின.

இதில் பினால்டி கோல்கள் எண்ணிக்கையில் குரோஷியா வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

முதல் பாதி ஆட்டத்திலேயே இரு குழுக்களும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தன.

#TamilSchoolmychoice

குரோஷியா சார்பில் மான்ட்சுகிக் கோல் அடிக்க, டென்மார்க் சார்பில் ஜோர்கான்சன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

எனினும், 90 நிமிடத்தில் இரு தரப்புகளும் அதே சமநிலையில் நீடித்ததால் ஆட்ட நேரம் நீட்டிக்கப்பட்டு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

120 நிமிடங்கள் வழங்கப்பட்டும் 1-1 என குரோஷியா-டென்மார்க் இரண்டும் சமநிலையில் இருந்த காரணத்தால், பினால்டி கோல்கள் மூலம் வெற்றியாளரை நியமிக்கும் நிலைமை ஏற்பட்டது.

இதில் குரோஷியா 3-2 என்ற எண்ணிக்கையில் பினால்டி கோல்களின் வழி வெற்றி பெற்று கால் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியது.

மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.