மாஸ்கோ – 90 நிமிட ஆட்ட நேரம் நீட்டிக்கப்பட்டு 120 நிமிடங்கள் வழங்கப்பட்டும் இரஷியா-ஸ்பெயின் 1-1 என சமநிலையில் இருந்த காரணத்தால், பினால்டி கோல்கள் மூலம் வெற்றியாளரை நியமிக்கும் நிலைமை ஏற்பட்டது.
இதில் இரஷியா 4-3 என பினால்டி கோல்களின் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது சுற்றுக்கான ஆட்டத்தில் ஸ்பெயின், இரஷியா தலா ஒரு கோல் அடித்து 1-1 என்ற நிலையில் முதல் பாதி ஆட்டம் வரை சமநிலை வகித்தன.
இரஷியாவின் ஆட்டக்காரர் செர்கெய் இக்னாஷெய்விச் கால் பட்டு, இரஷியாவின் கோல்வலைக்குள் பந்து புகுந்ததால், இரஷியா 12-வது நிமிடத்தில் சொந்த கோல் அடித்தது.
இதன் காரணமாக ஸ்பெயின் 1-0 என்ற நிலையில் முன்னணிக்கு வந்தது.
எனினும் தொடர்ந்து 41-வது நிமிடத்தில் பினால்டி வளையத்துக்குள் ஸ்பெயின் ஆட்டக்காரரின் கைகள் பட்டதால் இரஷியாவுக்கு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த் வாய்ப்பைப் பயன்படுத்தி இரஷியாவின் ஆர்ட்டெம் டிசுபா கோலைப் புகுத்த இரு நாடுகளும் 1-1 என சமநிலை கண்டன.
90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்த பின்னரும் இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காத காரணத்தால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கி ஆட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல்கள் அடிக்க முடியாத காரணத்தால், இந்த ஆடடத்தின் வெற்றி தோல்வி, ஒவ்வொரு குழுவுக்கும் தலாம 5 பினால்டி கோல்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் முடிவு செய்யப்படும்,
ஸ்பெயின் – இரஷியா மோதல்
இதுவரை நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் மொத்தம் எட்டே நாடுகள்தான் மாறி மாறி உலகக் கிண்ணத்தை வென்று சாதனை புரிந்துள்ளன. அவற்றில் ஒன்று ஸ்பெயின்!
2010-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் முதன் முறையாக நுழைந்த ஸ்பெயின் அந்த ஆண்டே இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தையும் வென்றது.
அதன் பின்னர் இந்த ஆண்டு, 16 நாடுகளைக் கொண்ட இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள ஸ்பெயின் இன்று ஞாயிற்றுக்கிழமை இரஷியாவைச் சந்தித்து விளையாடியது.
இரஷியா இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும் அதே வேளையில் தனது சொந்த மண்ணில் இலட்சக்கணக்கான இரசிகர்களின் முழக்கத்தின் ஆதரவுடன் களமிறங்கியது.