Home நாடு அம்னோவின் இன்னொரு மகளிர் எம்.பி விலகினார்

அம்னோவின் இன்னொரு மகளிர் எம்.பி விலகினார்

1082
0
SHARE
Ad

மலாக்கா – அம்னோவிலிருந்து தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அந்தக் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில் மலாக்கா மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் இன்று அம்னோவிலிருந்து விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படும் முடிவை அறிவித்தார்.

நடந்து முடிந்த அம்னோ தேர்தல்கள் தனக்கு அதிருப்தியை அளித்திருக்கும் காரணத்தால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மாஸ் எர்மியாத்தி தெரிவித்துள்ளார்.

மாஸ் எர்மியாத்தி அம்னோ புத்ரி பிரிவின் முன்னாள் தலைவராவார்.