Home நாடு தேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி!

தேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி!

1093
0
SHARE
Ad
அம்னோ தொலைக்காட்சி விவாதத்தின்போது கைரி…

கோலாலம்பூர் – அம்னோ தலைவருக்கான பதவியில் தோல்வியைத் தழுவிய கைரி ஜமாலுடினுக்கு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பொறுப்பை வழங்குவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார்.

எனினும் அந்தப் பொறுப்பு தனக்கு வேண்டாம் என கைரி ஜமாலுடின் மறுத்து விட்டார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கைரி அம்னோவில் தனக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வேண்டாம் என சாஹிட்டிடம் தான் மறுத்து விட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து கொண்டு அதற்குரிய கடமைகளை மட்டும் ஆற்றி வரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.