Home உலகம் ஜப்பான் 3-2 கோல்களில் பெல்ஜியத்திடம் தோல்வி

ஜப்பான் 3-2 கோல்களில் பெல்ஜியத்திடம் தோல்வி

854
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) நடைபெற்ற ஜப்பான் – பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான விறுவிறுப்பானஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 கோல்களில் ஜப்பானைத் தோற்கடித்தது.

ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம் என்னவென்றால் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் முதல் பாதி ஆட்டத்தில் முன்னணியில் இருந்த அந்நாடு இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து 3 கோல்களை வாங்கி பெல்ஜியத்திடம் தோல்வியுற்றதுதான்.

ஜப்பானின் முதல் கோலை 48-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் மூலம் ஹராகோச்சி அடித்தார். அதைத் தொடர்ந்து 52-வது நிமிடத்தில் இனுய் இரண்டாவது கோல் அடிக்க, ஜப்பான் 2-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகிக்கத் தொடங்கியது. கால் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகப் போவதும் ஏறத்தாழ உறுதியானதுபோல் தெரிந்தது.

#TamilSchoolmychoice

ஆனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் வெர்டோங்கன் 69-வது நிமிடத்திலும், ஃபெல்லாயினி 74-வது நிமிடத்திலும் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் 90 நிமிடத்துக்கான ஆட்டம் முடிந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தின் 4-வது நிமிடத்தில் சாட்லி மற்றொரு கோல் அடிக்க கால் இறுதிச் சுற்றுக்குச் செல்லும் ஜப்பானின் உலகக் கிண்ணக் கனவுகள் சிதைந்தன.

3-2 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்ற பெல்ஜியம் கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.