Home உலகம் உலகக் கிண்ணம் : கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6 தொடங்குகின்றன

உலகக் கிண்ணம் : கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6 தொடங்குகின்றன

971
0
SHARE
Ad

மாஸ்கோ – கடந்த சில நாட்களாக இரவெல்லாம் கண்விழித்து 16 நாடுகள் கலந்து கொண்ட இரண்டாவது சுற்று உலகக் கிண்ணப் போட்டிகளைக் கண்டு இரசித்து வந்த காற்பந்து இரசிகர்களுக்கு இன்றும் நாளையும் இனிய விடுமுறையாகும்.

கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும், தொலைத்த தூக்கத்தைத் திரும்பப் பெறவும் இந்த இரண்டு நாட்களை காற்பந்து இரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கால் இறுதிச் சுற்றுக்கு தேர்வான 8 குழுக்களுக்கிடையிலான ஆட்டங்கள் ஜூலை 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

6-ஆம் தேதி மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உருகுவே, பிரான்ஸ் மோதுகின்றன.

மலேசிய நேரப்படி ஜூலை 7-ஆம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் களமிறங்குகின்றன.

தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து சுவீடனைச் சந்திக்கும். இரண்டாவது ஆட்டத்தில் இரஷியா – குரோஷியாவைச் சந்திக்கிறது.