Home உலகம் இரஷியாவை பினால்டிகளில் தோற்கடித்தது குரோஷியா

இரஷியாவை பினால்டிகளில் தோற்கடித்தது குரோஷியா

975
0
SHARE
Ad

மாஸ்கோ – சனிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற இரஷியா-குரோஷியா இடையிலான கால் இறுதி ஆட்டம் இறுதி வரை பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் திகழ்ந்தது.

ஒரு காலத்தில் சோவியத் இரஷியாவின் ஓர் அங்கமாக இருந்த குரோஷியா 1990-ஆம் ஆண்டுகளில் தனி நாடாகப் பிரிந்து சென்று தற்போது காற்பந்து போட்டிகளில் உலக அரங்கில் சாதனை புரிந்து வருகிறது.

அந்த சாதனைகளின் ஒரு பகுதியாக நேற்றைய ஆட்டத்தில் இரஷியாவையே தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்தில் நுழைகிறது.

#TamilSchoolmychoice

மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.

ஆட்டம் முடியும் வரை, இரண்டு குழுக்களும் தலா 2 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.

முதல் பாதியில் இரஷியாவின் முதல் கோலை செரிஷேவ் 31-வது நிமிடத்தில் போட்டு இரஷியாவை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

அடுத்த 39-வது நிமிடத்தில் குரோஷியாவின் கிராமாரிக் ஒரு கோல் புகுத்தி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

இரண்டாவது பாதியில் 90 நிமிடங்கள் கடந்த பின்னரும் இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் கூடுதல் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் 101 நிமிடத்தில் குரோஷியாவின் விடா ஒரு கோல் அடித்து தனது குழுவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். எனினும் அடுத்த 115-வது நிமிடத்தில் பெர்னாண்டஸ் இரஷியாவின் சார்பில் ஒரு கோல் போட்டு மீண்டும் ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார்.

இதன் காரணமாக பினால்டிகளின் மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்திற்கு இரண்டு குழுக்களும் தள்ளப்பட்டன.

பினால்டிகளில் 4-3 என்ற கோல் கணக்கில் குரோஷியா இரஷியாவைச் சொந்த மண்ணிலேயே தோற்கடித்தது.

உபசரிப்பு நாடான இரஷியா இந்த முறை அரையிறுதி ஆட்டத்திற்கு செல்லும் கனவுகள் இதனால் தகர்ந்தன.

இனி அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியா இங்கிலாந்தைச் சந்திக்கும்.