Home உலகம் அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார் துருக்கி அதிபர்!

அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார் துருக்கி அதிபர்!

921
0
SHARE
Ad

இஸ்தான்புல் – துருக்கியின் இஸ்தான்புல்லில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு விட்டு, எதிர்வரும் வியாழக்கிழமை வலது தோள்பட்டையில் அங்கேயே மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை துருக்கிய அதிபர் ரிசப் தய்யிப் எர்டோகன் தனது துணைவியாருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார்.

அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.எர்டோகன் துருக்கியின் அதிபராக மீண்டும் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மலேசிய மாமன்னரின் வாழ்த்துகளையும், பிரதமர் துன் மகாதீரின் வாழ்த்துகளையும் எர்டோகனிடம் தெரிவித்ததாகவும் அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவுக்கும், துருக்கிக்கும் இடையிலான வலுவான நல்லுறவுகள் தொடரும் என்ற எதிர்பார்ப்பையும் தான் வெளிப்படுத்தியதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

துருக்கி மருத்துவமனையில் அன்வார்