Home உலகம் தாய்லாந்து குகை: பயிற்சியாளர் இறுதியாக மீட்கப்படுவார்

தாய்லாந்து குகை: பயிற்சியாளர் இறுதியாக மீட்கப்படுவார்

986
0
SHARE
Ad

பேங்காக் – தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள  குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் ஒரு பயிற்சியாளரையும் கொண்ட குழுவை மீட்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை எஞ்சிய 4 சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை வரையில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும், அவர்களோடு குகையில் சிக்கி இருக்கும் 25-வயது பயிற்சியாளர் கடைசியாகத்தான் மீட்கப்படுவார் என்பதோடு, மேலும் ஒரு நாள் அவர் அந்தக் குகையில் இருக்க நேரிடலாம் – இன்றைய இரவையும் அங்கேயே கழிக்கும் நிலைமை ஏற்படலாம் – என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்குக் காரணம் பாதுகாப்பு காரணங்களால் ஒரு தடவைக்கு 4 பேரை மட்டுமே வெளியே கொண்டுவருவதுதான் சரியானதாக இருக்கும் என மீட்புக் குழுவினர் கருதுகின்றனர்.

பிரிட்டனின் உதவியோடு இந்த மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

11 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களைக் கொண்ட அந்தக் குழுவினரும் 25 வயதுடைய அவர்களின் பயிற்சியாளரும் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக அந்தக் குகையில் சிக்கியிருந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் அந்த சிறுவர்களின் மீட்புப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் உலகக் காற்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தைக் காண அந்த சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.