Home உலகம் தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 பேர் மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 பேர் மீட்பு

1006
0
SHARE
Ad

பேங்காக் – தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள  குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் ஒரு பயிற்சியாளரையும் கொண்ட குழுவிலிருந்து மேலும் நால்வர் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் கட்டமாக 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

11 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களைக் கொண்ட அந்தக் குழுவினரும் 25 வயதுடைய அவர்களின் பயிற்சியாளரும் கடந்த 16 நாட்களாக அந்தக் குகையில் சிக்கியிருந்தனர்.

#TamilSchoolmychoice

அந்தக் குழுவிலிருந்து நேற்று வரை மீட்கப்பட்ட 4 பேர் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட நால்வரும் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் அந்த சிறுவர்களின் மீட்புப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் உலகக் காற்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைக் காண்பதற்கு அந்த சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.