Home உலகம் பிரான்ஸ் 1- பெல்ஜியம் 0 – இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்!

பிரான்ஸ் 1- பெல்ஜியம் 0 – இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்!

1014
0
SHARE
Ad

மாஸ்கோ – (புதன்கிழமை அதிகாலை 4.00 மணி நிலவரம்) செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

மலேசிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.

முதல் பாதியில் இரு குழுக்களும் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரான்சின் யும்டிடி ஒரு கோலைப் போட்டு பிரான்சை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியிருக்கும் 4 நாடுகளுமே ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்தவையாகும்.

புதன்கிழமை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து குரோஷியாவைச் சந்திக்கிறது.

இந்தப் போட்டியின் வெற்றியாளரை பிரான்ஸ் இறுதி ஆட்டத்தில் சந்திக்கும்.

1998-இல் உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி கொண்டது. அதன்பின்னர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இறுதி ஆட்டத்தில் நுழைவதால் பிரான்ஸ் முழுவதும் உற்சாகமான  கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன.