Home கலை உலகம் ரஜினியின் “2.0” நவம்பர் 29 வெளியீடு

ரஜினியின் “2.0” நவம்பர் 29 வெளியீடு

927
0
SHARE
Ad

சென்னை – நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து வரும் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமானத் தயாரிப்பான “2.0” – எந்திரன் படத்தின் இரண்டாவது பாகம் – ஒரு வழியாகத் திரையீடு காணவிருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி 2.0 வெளியிடப்படும் என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தின் இரண்டு பாடல்களுக்கான இசை வெளியீடு மிகப் பிரம்மாண்டமான அளவில் துபாய் நகரில் நடந்தேறியது.

2.0 படம் குறித்த வெளியீட்டுத் தகவலை சமூக ஊடகங்களில் தெரிவித்திருக்கும் இயக்குநர் ஷங்கர் படத்திற்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் விஷூவல் எபெக்ட்ஸ் நிறுவனம் படத்திற்கான காட்சிகளை முடித்துத் தரும் தேதிகளை நிர்ணயித்திருப்பதால், நவம்பர் 29-ஆம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படம் 3-டி வடிவத்திலும் வெளியீடு காண்கிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்குப் பின்னரே 2.0 வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.