இரண்டாவது பரிசு – ரக்ஷிதா
மூன்றாவது பரிசு – மாளவிகா
மற்றொரு பாடகரான ஸ்ரீகாந்துக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. இவரைத் தனது இசையமைப்பில் பாட அழைப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆறு மாத காலமாக இந்தப் பாடல் திறன் போட்டிகள் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வந்தன.
அமெரிக்காவில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அங்கிருந்தபடியே தனது வாழ்த்துகளை காணொளி வழி அவர் தெரிவித்திருந்தார். அவரது அந்தக் காணொளியும் நேரலையாக ஒளிபரப்பானது.
பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.