Home நாடு பலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்…ஆனால்….

பலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்…ஆனால்….

1381
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடைபெறவிருக்கும் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மசீச போட்டியிடும் என்பதை அறிவித்துள்ள மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், ஆனால், தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிடாமல் மசீசவின் சொந்த சின்னத்தில் போட்டியிட ஆலோசித்து வருகிறது என அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அம்னோ துணைத் தலைவரான முகமட் ஹசான், தேசிய முன்னணி சின்னத்தை விட மசீச சின்னத்தின் மூலம் போட்டியிடுவதால் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என மசீச கருதினால் அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி, புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சின்னத்திலேயே போட்டியிட அம்னோ முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

மசீச சொந்த சினத்தில் போட்டியிட்டால் அதன்மூலம் சீனர்களிடையே அதன் செல்வாக்கை எடுத்துக் காட்டும் களமாக பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் அமையும்.