Home நாடு டாயிம் சைனுடின் தலையீடுகளால் சர்ச்சைகள்!

டாயிம் சைனுடின் தலையீடுகளால் சர்ச்சைகள்!

1431
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீரின் தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் மூத்த ஆலோசகர்களின் ஆலோசனை மன்றம் முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் தலைமையில் அமைக்கப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் தற்போது இந்தக் குழுவின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, பலவித கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக, டாயிம் சைனுடின் சீனாவின் திட்டங்கள் குறித்து விவாதிக்க சீனா சென்றுள்ளது இன்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. வெளியுறவு அமைச்சர் அல்லது நிதியமைச்சர் அல்லது பொருளாதாரத் துறை அமைச்சர் யாராவது கையாண்டிருக்க வேண்டிய இந்த விவகாரத்தை டாயிம் சைனுடின் நேரடியாக சீனா சென்று கையாண்டது குறித்து கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ தலைமைச் செயலாளருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது போது கடுமையாகச் சாடினார்.

நாடாளுமன்ற அவைக்கு வெளியே பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மசீச துணைத் தலைவரும் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ கா சியோங் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் மூத்தோர் ஆலோசனை நிறுவப்பட்டது என்றும் – அதன் அதிகாரங்களில் எல்லைகள் என்ன என்பது விளக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, நீதிபதிகளை அழைத்து விவாதித்தது, அமைச்சர்களை அழைத்து விவாதித்தது போன்ற விவகாரங்களிலும் மூத்தோர் ஆலோசனை மன்றத்தின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளாயின.