Home நாடு சாகிர் நாயக் பிரச்சனையால் இந்திய வாக்குகளை பக்காத்தான் இழக்கும்

சாகிர் நாயக் பிரச்சனையால் இந்திய வாக்குகளை பக்காத்தான் இழக்கும்

3241
0
SHARE
Ad

கிள்ளான் – நடைபெறவிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் அதற்குக் காரணம் சாகிர் நாயக் பிரச்சனையில் துன் மகாதீர் எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் என்றும் மஇகா சாடியுள்ளது.

மஇகா சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவரான எஸ்.கஜேந்திரன் இவ்வாறு கூறியதாக மலேசியாகினி தெரிவித்தது.

50,800 வாக்காளர்களைக் கொண்ட சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்தில் சுமார் 16 விழுக்காட்டினர் இந்தியர்களாவர். 72 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 12 விழுக்காடு சீன வாக்காளர்களையும் இந்தத் தொகுதி கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“பல விவகாரங்களில் குறுகிய காலத்திலேயே பக்காத்தான் கூட்டணி மீது இந்தியர்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, சாகிர் நாயக் விவகாரத்தில் மஇகா என்ன செய்தது என அன்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போது நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெற்றும் அமைதி காத்து வருகின்றனர். சாகிர் நாயக் ஏன் இதுவரை நாடு கடத்தப்படாமல் இருக்கிறார் என்ற கேள்விக்கும் பதில் இல்லை. மேலும் பக்காத்தான் அரசாங்கத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன” என்றும் கஜேந்திரன் கூறினார்.

டோல் கட்டண நீக்கம், பெட்ரோல் விலைக் குறைப்பு, போன்றவை பக்காத்தான் கூட்டணி இன்னும் நிறைவேற்றாமல் இருக்கும் சில அறிவிப்புகளாகும்.