Home இந்தியா “கலைஞர் எழுதிய பேனா” – வைரமுத்துவின் உருக்கமான கவிதை

“கலைஞர் எழுதிய பேனா” – வைரமுத்துவின் உருக்கமான கவிதை

4726
0
SHARE
Ad

சென்னை- உடல் நலம் குன்றி இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதி குறித்து உருக்கமான கவிதை ஒன்றை எழுதி கவிப் பேரரசு வைரமுத்து, ஒரு சிறு முன்னுரையோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கலைஞர் எழுதிய பேனா..என்ற தலைப்பிலான அந்தக் கவிதை இதுதான்:

கலைஞர் எழுதிய பேனா..

என் பிறந்தநாளை ஒட்டிக் கலைஞரிடம் அவர் எழுதிய பேனாவைப் பரிசாகப் பெற்றேன். என் வாழ்நாளின் பெரும்பரிசு என்று பெருமையுற்றேன்.

#TamilSchoolmychoice

அதே பேனாவில் எழுதிய கவிதை இது :

கண்ணிலே குடியிருக்கும்
கலைஞரே! கொஞ்ச நாளாய்ச்
சின்னதாய் எனக்கோர் ஆசை
செவிசாய்த்தே அருள வேண்டும்
பொன்பொருள் வேண்டாம்; செல்வ
பூமியும் வேண்டாம்; வேறே
என்னதான் வேண்டும்; உங்கள்
எழுதுகோல் ஒன்று வேண்டும்
*
எழுதுகோல் அன்று; நாட்டின்
எழுகோடித் தமிழர் நெஞ்சை
உழுதகோல்; உரிமைச் செங்கோல்!
உழைக்கின்ற ஏழை யர்க்காய்
அழுதகோல்; இலக்கி யத்தின்
அதிசய மந்தி ரக்கோல்
தொழுதுகோல் கொண்டேன்; நீங்கள்
தொட்டகோல் துலங்கச் செய்வேன்

வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் படம்