Home இந்தியா கலைஞரைப் பார்க்க வந்த ரஜினி, விஜய்!

கலைஞரைப் பார்க்க வந்த ரஜினி, விஜய்!

1059
0
SHARE
Ad

சென்னை – இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அவர் மு.க.ஸ்டாலினையும், மு.க.அழகிரியையும் சந்தித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ரஜினி கருணாநிதி குடும்பத்தினரைச் சந்தித்து நலம் விசாரித்ததாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி என ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்ட ரஜினி கருணாநிதி நலமடையப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

நடிகர் விஜய்யும் கலைஞர் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை வந்து ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.