Home இந்தியா இந்திய அதிபர் கலைஞரை நலம் விசாரித்தார்

இந்திய அதிபர் கலைஞரை நலம் விசாரித்தார்

1030
0
SHARE
Ad

சென்னை – ஹைதராபாத் நகரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் காவேரி மருத்துவமனையில் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு இந்திய அதிபர் தமிழிலேயே பதிவிட்டிருந்தார்:

“திரு கருணாநிதி அவர்களைச்  சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” – குடியரசு தலைவர் கோவிந்த்

#TamilSchoolmychoice

காவேரி மருத்துவமனையில் இந்திய அதிபரை மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் வரவேற்றனர்.