Home இந்தியா கருணாநிதி உடல் நலம் : அண்மைய நிலவரங்கள்

கருணாநிதி உடல் நலம் : அண்மைய நிலவரங்கள்

1096
0
SHARE
Ad

சென்னை – இங்கு கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுவதும் கண்ணீருடனும் – கலக்கத்துடனும் – கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் நிலையில், அவரது உடல் நலம் குறித்த அண்மைய நிலவரங்கள் வருமாறு:

  • நேற்றிரவு முழுவதும் கலைஞரின் மனைவி ராசாத்தி அம்மாளும், மகள் கனிமொழியும் காவேரி மருத்துவமனையிலேயே தங்கி கலைஞரின் உடல் நலத்தைக் கண்காணித்து வந்தனர்.
  • டெல்லியில் இருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.
  • கலைஞரின் வயது, மூப்பு காரணமாக அவரது உடல் உறுப்புகளை செயல் இழக்காமல் இயங்க வைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும், சவாலாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.
  • மருத்துவமனையைச் சுற்றிலும் தொடர்ந்து காவல் துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.