மெரினாவில் இறந்தவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்படுவது குறித்து ஏற்கனவே சில வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற விசாரணையில் அந்த வழக்குகளைப் போட்ட டிராபிக் இராமசாமி, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பாலு ஆகியோர் தங்களின் வழக்குகளை மீட்டுக் கொண்டனர்.
காமராஜர் நினைவிடம் அருகில் காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் கருணாநிதியின் நல்லடக்கத்திற்காகவும், நினைவிடம் அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் அந்த முடிவில் தலையிட முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இன்று காலையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.