
சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 1.15 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் இருந்து புறப்பட்டு சற்று முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து அவர் கலைஞருக்கு மரியாதை செலுத்த இன்னும் சற்று நேரத்தில் இராஜாஜி அரங்கத்தை வந்தடைவார்.