Home நாடு மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

899
0
SHARE
Ad
பதவி உறுதி மொழி ஏற்றுக் கொள்ளும் மொகிதின்

கோலாலம்பூர் – ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி கணையத்தில் கட்டி ஒன்றை அகற்றுவதற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மொகிதின் யாசின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) நாடு திரும்பினார்.

எனினும் அவருக்கு இன்னும் தொடர் சிகிச்சை வழங்கப்படுவதாலும், இன்னும் முழுமையாக அவர் குணமடைந்து விடவில்லை என்பதாலும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவரது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் குறைவாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த மொகிதின் யாசின்