Home நாடு அன்வார் பேராக் மாநில நாடாளுமன்றத்திற்குப் போட்டியா?

அன்வார் பேராக் மாநில நாடாளுமன்றத்திற்குப் போட்டியா?

819
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப எந்த இடத்தில் அன்வார் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் வலுத்துவரும் வேளையில், பிகேஆர் கட்சியின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்காக விட்டுக் கொடுக்கப் போகிறார் என்பதிலும் பலர் முன்வந்து தங்களின் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் பேராக் மாநிலத்தில் அம்னோவிலிருந்து விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயல்படும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தங்களின் பதவியை இராஜினாமா செய்ய அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் அன்வார் போட்டியிடுவார் என்ற புதிய ஆரூடம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அம்னோவின் தொகுதி ஒன்றைக் கைப்பற்றி  பிகேஆர் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

பாகான் செராய், புக்கிட் கந்தாங் ஆகிய இரண்டு பேராக் மாநில நாடாளுமன்றத் தொகுதிகளே அன்வார் குறிவைத்திருக்கும் தொகுதிகள் எனக் கூறப்படுகிறது.

பாகான் செராய் நாடாளுமன்றத்தில் அம்னோ வேட்பாளராக வெற்றி பெற்ற டாக்டர் நூர் அஸ்மி கசாலி அஸ்மி, புக்கிட் கந்தாங் தொகுதியில் வெற்றி பெற்ற அம்னோவின் சைட் அபு ஹூசின் ஹபிஸ் சைட் அப்துல் பசால் – ஆகிய இருவரும் அம்னோவிலிருந்து விலகி தற்போது சுயேச்சை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி விலகி அதன் மூலம், அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.