Home நாடு “அன்வார்தான் அடுத்த பிரதமர்” – டாயிம் உறுதி கூறுகிறார்

“அன்வார்தான் அடுத்த பிரதமர்” – டாயிம் உறுதி கூறுகிறார்

965
0
SHARE
Ad

கோலாலம்பூர் –  அன்வார் அடுத்த பிரதமராக வருவதைத் தடுக்க துன் டாயிம் சைனுடின் சதியாலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என சில தரப்புகள் தெரிவித்துள்ள வேளையில், அது குறித்து சிரித்துக் கொண்டே இன்று மழுப்பியிருக்கிறார் டாயிம் சைனுடின் (படம்).

நான் இந்த விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று கூறியுள்ள டாயிம், அன்வாரும் அந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு மூத்த ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் பத்திரிக்கைகளுக்கு வழங்கிய பேட்டியில் டாயிம் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து டாயிமின் கருத்தைக் கேட்டபோது, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதுகுறித்து முன்பே முடிவெடுத்துவிட்டது என்று கூறிய டாயிம் அந்த அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம்தான் என்று உறுதிப்படுத்தினார்.