Home நாடு கைத்தொலைபேசியை அன்பளிப்பாகப் பெற மறுத்த அமைச்சர்

கைத்தொலைபேசியை அன்பளிப்பாகப் பெற மறுத்த அமைச்சர்

1056
0
SHARE
Ad
அன்பளிப்பை மறுக்கும் அந்தோணி லோக் – படம் : நன்றி – மலாய் மெயில்

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் முடிந்து பக்காத்தான் அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற துன் மகாதீர் 500 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மதிப்புடைய எந்தப் பொருளையும் அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறையைக் கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதற்கேற்ப நடந்து கொண்ட விதம் அனைத்து ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. டிஃப்ரைட் (Diffride) என்ற வாடகை வண்டி (டாக்சி) சேவையைத் தொடக்கி வைக்க வந்த அந்தோணி லோக்கிடம் அவரது உரை முடிந்ததும், அவருக்கு நினைவுப் பரிசு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை முதலில் பெற்றுக் கொண்ட அந்தோணி லோக் அது விலை மதிப்புள்ள திறன்பேசி (smartphone) என்பதை அறிந்ததும் உடனடியாக அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

ஹூவா வெய் ரக செல்பேசியான அதன் விலை ஏறத்தாழ 1,249 இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

“சொல்வது போல் நடந்து கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற நினைவுப் பரிசுகள், அன்பளிப்புகளால் எங்களைத் திருப்தியடைய வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இந்த செல்பேசியின் மதிப்பு 500 ரிங்கிட்டுக்கும் கூடுதலாக இருக்கும் என்பதால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.