Home நாடு அறிவியல், புத்தாக்கப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய தமிழ்ப்பள்ளிகள்

அறிவியல், புத்தாக்கப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய தமிழ்ப்பள்ளிகள்

1275
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையக் காலமாக தமிழ்ப் பள்ளிகளின் தரமும் தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் திறனும் உயர்ந்து வரும் அதே வேளையில், புறப்பாட நடவடிக்கைகளிலும் தமிழ்ப் பள்ளிகள் தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் சாதனைகள் புரிந்து வருகின்றன.

ஜோகூர் மாநிலத்தின் மாசாய் தமிழ்ப் பள்ளி அண்மையில் அனைத்துலக நாடகப் போட்டியில் முதல் பரிசை வென்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து அண்மையில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்பு, தீர்வுகளுக்கான 2018 அனைத்துலக ஆய்வுக் கண்காட்சியில் இதே மாசாய் தமிழ்ப் பள்ளி பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் பிரிவில் சிறப்பு விருதையும், இளையோருக்கான பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

அது மட்டுமின்றி இந்த முறை தமிழ்ப் பள்ளிகள் பல்வேறு பிரிவுகளில் வென்று சாதனை புரிந்துள்ளன. இதன் மூலம், தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்களின் திறனும், ஆற்றலும் மற்ற தேசியப் பள்ளிகளுக்கு இணையானவை அல்லது அதைவிடக் கூடுதலானவை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தக் கண்காட்சியில் பரிசை வென்ற தமிழ்ப் பள்ளிகள் வருமாறு:-

  • மாசாய் தமிழ்ப் பள்ளி (ஜோகூர்) – பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் பிரிவில் சிறப்பு விருது – இளையோருக்கான பிரிவில் சிறந்த படைப்புக்கான தங்கப் பதக்கம் (SJKT Masai – Gold, excellent award for Junior Category and Special award for Engineering & Technology)

வெற்றியாளர் : புஷ்பராணி சுப்ரமணி செல்வன்

  • ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளி (ஜோகூர்) – இயற்கை அறிவியல் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசு (SJKT Jalan Yahya Awal – Gold and special award for natural sciences)

    வெற்றியாளர்: லோகேஸ்வரி முருகன்

  • பூச்சோங் (14-வது மைல்) தமிழ்ப் பள்ளி – வாழ்வியல் அறிவியல் மற்றும் மருத்துவம் பிரிவு – தங்கப் பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசு (SJKT Puchong – gold and Special award for Life Sciences and Medicine)

   வெற்றியாளர் : ஏ.விஜயலெட்சுமி த/பெ        எஸ்.ஆவடையார்

  • தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி – தங்கப் பதக்கம்

வெற்றியாளர் : குணசுந்தரி மாசிலாமணி

  • ஜெஞ்சாரோம் (சிலாங்கூர்) தமிழ்ப் பள்ளி – வெள்ளிப் பதக்கம்

வெற்றியாளர்: திவ்யா சுருதி சுரேஷ்

  • லாடாங் சிகாமாட் (ஜோகூர்) தமிழ்ப் பள்ளி – வெள்ளிப் பதக்கம்

வெற்றியாளர்: ஜீவேந்திர பாண்டியன்

  • லாடாங் செப்ராங் (பேராக்) தமிழ்ப் பள்ளி – வெள்ளிப் பதக்கம்

வெற்றியாளர் : செல்வ லெட்சுமணன் ஜீவேந்திரா