Home நாடு சிவநேசன் ஏற்பாட்டில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம்

சிவநேசன் ஏற்பாட்டில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம்

1841
0
SHARE
Ad

ஈப்போ – நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணிக்குழு மற்றும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

ஈப்போவிலுள்ள பேராக் டாரூல் ரிட்சுவான்  கட்டடம், பங்குவேட் மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இந்தக் கருத்தரங்கம் நடைபெறும்.

இந்தக் கருத்தரங்கத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் சிறப்பு வருகை புரிவார். மேலும் பேராக் மாநிலக் கல்வி இயக்குநர் ஹாஜி மாட் லாஜிம் பின் இட்ரிசும் பேராக் மாநில அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தருவார்கள்.

#TamilSchoolmychoice

இந்த கருத்தரங்கில் பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் நிருவாகத் நிருவாகத்  துணைத் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வர்.

கீழ்க்காணும் அம்சங்களை முக்கிய விவாதக் கருப்பொருளாகக் கொண்டு இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது:

1.தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைகள்

2.தமிழ்ப்பள்ளிகளின் கட்டட, வகுப்பறை வசதிகள்

3.தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடும் மாணவர் உருவாக்கமும்

4.தமிழ்ப்பள்ளிகளில் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்

5.தமிழ்ப்பள்ளிகளில் இணைப்பாட வளர்ச்சித் திட்டங்கள்

நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹரப்பான்) தேர்தல் கொள்கை அறிக்கையின் அடிப்படையில்  பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாடுகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டின் நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கத்தின் சிறப்பு அங்கமாக 134 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 2060 யு.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்குத் தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு வழிகாட்டி நூல் இலவசமாக வழங்கப்படும். இதற்கான மொத்தச் செலவையும் அ.சிவநேசன் ஏற்றுக் கொண்டுள்ளார்.