Home நாடு ஆதி.இராஜகுமாரன் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

ஆதி.இராஜகுமாரன் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

2845
0
SHARE
Ad

 

Rajakumaran Photo Featureகோலாலம்பூர்- இன்று சனிக்கிழமை காலை காலமான நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்:

No.3, Jalan Kolam Air 7,
Taman Golden,
Off Jalan Ipoh
Kuala Lumpur.

#TamilSchoolmychoice

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் அன்னாரின் நல்லுடல் அவரது இல்லத்திலிருந்து செராஸ் மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இன்று காலை உடல் நலக்குறைவினால் காலமான
ஆதி.ராஜகுமாரன், அமரர் ஆதி.குமணனின் மூத்த சகோதரருமாவார். தமிழகத்தில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் அவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். தமிழ் மலர், வானம்பாடி, போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றி பின்னர் மக்கள் ஓசை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சொந்தத்தில் ‘நயனம்’ என்ற வார இதழை நீண்ட காலமாக அவர் நடத்தி வந்தார்.