Home நாடு யுபிஎஸ்ஆர் – தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள்

யுபிஎஸ்ஆர் – தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள்

1287
0
SHARE
Ad

கோலாலம்பூர் – செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான புபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, தமிழ் மொழி, ஆங்கிலம், அறிவியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்களை வி ஷைன் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டிகளும் மாதிரி கேள்வித் தாள்களுடனும், அதற்கான விடைகளுடனும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்வுகள் நெருங்கி வரும் இந்த வேளையில் மாணவர்கள் மீள்பார்வை செய்யும் விதத்திலும், தேர்வுத் தாள்களை ஒரு பயிற்சியாகச் செய்து பார்த்து இறுதித் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இந்த நூல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்களை கல்வித் துறையில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அறிவியல் தேர்வு வழிகாட்டி நூலை அந்தப் பாடத்தைக் கற்பிப்பதில் நீண்ட கால அனுபவம் கொண்ட தேன்மொழி இராஜனும், விக்னேஸ்வரி சாம்பசிவமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

தமிழ் மொழிக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள் எல்லா மாநிலங்களிலும் நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் உதவியோடு தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு கிடைக்கப் பெறாத தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கீழ்க்காணும் செல்பேசி எண்ணில் தங்களைகத் தொடர்பு கொள்ளலாம் என நூல் பதிப்பாளர்களான வி ஷைன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தமிழ் மொழிக்கான தேர்வு வழிகாட்டி நூலை, நன்கொடையாளர்களின் ஆதரவோடு அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இலவசமாகவே வழங்க வி ஷைன் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆங்கிலம், அறிவியல் ஆகிய நூல்கள் சில பள்ளிகளில் மட்டுமே நன்கொடையாளர்களின் ஆதரவோடு அந்தந்த தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

தலா RM 9.90 விலைகொண்ட ஆங்கிலம், அறிவியல் நூல்கள் யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கென சிறப்புக் கழிவு விலையில் தற்போது விற்பனையில் உள்ளன. இந்த நூல்களைப் பெற கீழ்க்காணும் செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:

விக்னேஸ்வரி சாம்பசிவம்

செல்பேசி எண்: 012-3922497