Home நாடு வண்ணமயமான புதிய தோற்றத்தில் பத்துமலைக் கோயில்

வண்ணமயமான புதிய தோற்றத்தில் பத்துமலைக் கோயில்

1112
0
SHARE
Ad

பத்துமலை – பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் இயற்கை அழகையும், உலகம் முழுவதும் பரவியிருக்கும் அதன் பெருமைகள் குறித்தும் விளக்கத் தேவையில்லை. நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மலேசியர்கள் தங்களின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதே நாளில் பத்துமலை திருக்கோவிலும் திருவிழா காண்கிறது.

ஆம்! அன்றுதான் பத்துமலைத் திருக்கோவிலுக்கான மகா கும்பாபிஷேகமும், திருக்குட நன் நீராட்டுப் பெருவிழாவும் கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு பத்துமலை திருத்தலமே வண்ணமயமாக புதிய தோற்றம் கண்டிருக்கின்றது.

ஆகஸ்ட் 31 காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பத்துமலை அடிவாரத் கோயில்களுக்கான திருக்குட நன் நீராட்டு விழா நடைபெறுகிறது. அடுத்து அதே நாளில் காலை 9.15 முதல் 10.15 வரை மேல்குகை திருக்கோயில்களுக்கான நன்நீராட்டு விழா நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு பத்துமலைத் திருத்தலத்தில் கூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கும்பாபிஷேகத்துக்கு முன்னதாகவே மக்கள் திரளாக வந்து அந்த வண்ணமயமான தோற்றத்தையும், அழகான மாற்றங்களையும் கண்டு இரசித்து வருகின்றனர்.

குறிப்பாக பத்துமலைக்குச் செல்லும் படிக்கட்டுகள் வண்ணமயமாக உருமாற்றம் கண்டு வித்தியாசமான தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.