Home Video “இமைக்கா நொடிகள்” – நயன்தாராவின் அடுத்த அதிரடி

“இமைக்கா நொடிகள்” – நயன்தாராவின் அடுத்த அதிரடி

1051
0
SHARE
Ad

சென்னை – ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ் நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ்ப் பட இரசிகர்களிடையே ஏற்படுத்திய கொண்டாட்டமும், உற்சாக சிரிப்பும், தாக்கமும் திரையரங்குகளில் அடங்கும் முன்னே அடுத்த அதிரடியைத் தொடக்கி விட்டார்.

அதுதான் “இமைக்கா நொடிகள்” திரைப்படம். இதில் விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாராவோடு, நடிகர் அதர்வாவும் இணைந்திருக்கிறார். போதாக் குறைக்கு பிரபல இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் வில்லனாக இந்தப் படத்தில் மிரட்டியுள்ளார்.

படத்தின் முன்னோட்டம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து 3.7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை சென்னையில் இந்தப் படம் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நுழைவுச் சீட்டுகளும் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் ஏதோ காரணங்களால் படம் நேற்று வெளியாகவில்லை. நுழைவுச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இரசிகர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டன என சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ‘இமைக்கா நொடிகள்’ இரசிகர்களை ஏமாற்றாமல் இன்று மலேசியா உட்பட உலகம் எங்கும் வெளியீடு கண்டுள்ளது. அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-