Home நாடு எஸ்.எம்.இட்ரிஸ் இல்லம் சென்றார் அன்வார் இப்ராகிம்

எஸ்.எம்.இட்ரிஸ் இல்லம் சென்றார் அன்வார் இப்ராகிம்

976
0
SHARE
Ad
எஸ்.எம்.இட்ரிஸ் இல்லத்தில் அன்வார் இப்ராகிம்

ஜோர்ஜ் டவுன் – பினாங்குக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.எம்.இட்ரிஸ் இல்லத்திற்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு வருகை தந்தார்.

இட்ரிஸ் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக இருந்து நீண்ட காலமாக பயனீட்டாளர் விவகாரங்களிலும், சமூக விவகாரங்களிலும் தீவிரமாகப் போராடி வந்திருக்கிறார். பயனீட்டாளர் உரிமைகளுக்கான போராட்டங்களை இந்த நாட்டில் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் இட்ரிஸ் ஆவார்.

இட்ரிஸ் இல்லத்திற்கு வருகை தந்த அன்வார் அந்தப் புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு “இட்ரிஸ் மனஉறுதி கொண்ட, இறுதிவரை நிலைகுலையாத சமூகப் போராளி” என்றும் பாராட்டி வர்ணித்திருக்கிறார்.