Home கலை உலகம் பிக் பாஸ் 2 : வெளியேறப் போவது டேனியலா?

பிக் பாஸ் 2 : வெளியேறப் போவது டேனியலா?

2240
0
SHARE
Ad
பிக்பாஸ் 2 தமிழ் – டேனியல்

சென்னை – தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் தொலைக்காட்சி இரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். பொதுவாக ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற்றப்படப் போகிறார் என்பது இறுதி வரை இரகசியமாக வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தில் ஒளியேறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவிப்பார்.

ஆனால், இந்த முறை இந்த வாரம் நடிகர் டேனியல் வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் கசிந்து வருகின்றன.

இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட மூவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர். டேனியல், பாலாஜி, ஜனனி ஆகிய மூவரில் வெளியேற்றப்படப் போவது யார் என்ற ஆர்வம் இரசிகர்களிடையே எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

கசிந்திருக்கும் தகவல்களின்படி இன்றைய நிகழ்ச்சியில் வெளியேறவிருப்பது டேனியலா – அல்லது கமல்ஹாசனின் அறிவிப்பில் மாற்றம் வருமா?

இன்றிரவு தெரிந்து விடும்!