Home இந்தியா விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

855
0
SHARE
Ad

சென்னை – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) உடல் நலக் குறைவுக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இனி அடுத்த கட்ட சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், விஜயகாந்த் உடல் நலம் தேறி விரைவில் பொதுவாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி கேட்டுக் கொண்டுள்ளார்.