Home இந்தியா மருத்துவமனையில் விஜயகாந்த்! நலமுடன் இருப்பதாகத் தகவல்!

மருத்துவமனையில் விஜயகாந்த்! நலமுடன் இருப்பதாகத் தகவல்!

1094
0
SHARE
Ad

சென்னை – தேசிய முற்போக்குத் திராவிட கழகத் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டதால் தேமுதிக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அவரது உடல் நலம் சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கட்சியின் சார்பிலான அறிக்கை ஒன்று தெரிவித்தது.

“எனது தந்தையார் நலமுடன் இருக்கிறார். அவர் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” என விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரனும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice