பாலெம்பாங் – கடந்த 2 வாரங்களாக இந்தோனியாவின் பாலெம்பாங் நகரில் நடைபெற்று வந்த ஆசியப் போட்டிகளில் மலேசியா 7 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஆசியப் போட்டிகளில் கொண்டிருந்த இலக்குகளை விட அதிகமாகவே பதக்கங்களை மலேசியா பெற்றிருக்கிறது. மொத்த நாடுகளின் பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தை மலேசியா அடைந்திருக்கிறது.
எந்தெந்த விளையாட்டுகளில் மலேசியா பதக்கங்களைப் பெற்றது என்பதைக் காட்டும் பட்டியல்:
ஆசியப் போட்டிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் சீனா பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை தென் கொரியாவும் பிடித்திருக்கின்றன.
ஆசியப் போட்டிகளை ஏற்று நடத்திய நாடான இந்தோனிசியா நான்காவது இடத்தைக் கைப்பற்றியது.
விளையாட்டுத் துறையில் முன்னேறிவரும் மற்றொரு நாடான இந்தியா 8-வது இடத்தைப் பிடித்தது. ஆசியப் போட்டிகளில் நாடுகளின் பதக்கப் பட்டியல் பின்வருமாறு:-
Gold | Silver | Bronze | |
China | 132 | 92 | 65 |
Japan | 75 | 56 | 74 |
South Korea | 49 | 58 | 70 |
Indonesia | 31 | 24 | 43 |
Uzbekistan | 21 | 24 | 25 |
Iran | 20 | 20 | 22 |
Taiwan | 17 | 19 | 31 |
India | 15 | 24 | 30 |
Kazakhstan | 15 | 17 | 44 |
North Korea | 12 | 12 | 13 |
MALAYSIA | 7 | 13 | 16 |
இந்தப் பட்டியலில் மலேசியா 14-வது இடத்தைப் பிடித்தது.