Home நாடு அன்வார் போட்டியிடும் தொகுதி – இந்த மாதம் அறிவிப்பு

அன்வார் போட்டியிடும் தொகுதி – இந்த மாதம் அறிவிப்பு

786
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இடைத் தேர்தல் ஒன்றின் மூலம் நாடாளுமன்றத்தில் அமர்வேன் என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கும் நிலையில், அவர் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதி இந்த மாதம் அறிவிக்கப்படும் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அன்வார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆர்வமும் அரசியல் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.