Home நாடு கேமரன் மலை தேர்தல் செல்லுமா? வழக்கு தொடங்குகிறது!

கேமரன் மலை தேர்தல் செல்லுமா? வழக்கு தொடங்குகிறது!

1016
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9-இல் நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் அந்தத் தேர்தல் முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி அங்கு போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் வழக்கறிஞர் எம்.மனோகரன் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்தத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் (படம்) போட்டியிட்டு ஜசெக வேட்பாளர் மனோகரனை 597 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மஇகா வென்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கேமரன் மலை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.

NEGERI PAHANG
Parlimen P.078 – CAMERON HIGHLANDS
PARTI MENANG BN
MAJORITI UNDI 597
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
MANOGARAN (PKR) 9710
CIKGU WAN MAHADIR (PAS) 3587
DATO’ SIVARRAAJH CHANDRAN (BN) 10307
USTAZ TAHIR (BERJASA) 81
SURESH KUMAR (PSM) 680

 

#TamilSchoolmychoice

எனினும் சிவராஜின் வெற்றியைத் தொடர்ந்து கேமரன் மலை நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி மனோகரன் (படம்) சிறப்பு தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் சிவராஜ் சமர்ப்பித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகள் அடங்கிய விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்து, முழுமையான வழக்கு நடைபெற வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது. அதன்படியே அந்த வழக்கு இன்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

இந்த வழக்கில் தனது தரப்பு சார்பாக 36 சாட்சிகள் விசாரிக்கப்படுவர் என மனோகரன் தெரிவித்திருக்கிறார்.