Home கலை உலகம் ஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார்

ஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார்

1077
0
SHARE
Ad

ஹாலிவுட் – 1970-ஆம் ஆண்டுகளின் காலகட்டம் தொடங்கி பல்வேறு ஆங்கிலப் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் (படம்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

அவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அடர்ந்த மீசை, கௌபாய் பாணியிலான தொப்பி ஆகியவற்றுடன் கூடிய அவரது தனிப்பட்ட தோற்றமும் நடிப்பும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்திழுத்தது. அவரது காலகட்டத்தில் ஏராளமான பெண் இரசிகைகளைக் கொண்டிருந்த கவர்ச்சி நடிகராக பர்ட் ரெனோல்ட்ஸ் திகழ்ந்தார்.

#TamilSchoolmychoice

பர்ட் ரெனோல்ட்ஸ் இருதயக் கோளாறினால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2010-இல் இருதய இரத்தக் குழாய் அடைப்பு தொடர்பான அறுவைச் சிகிச்சை நடந்தது.