Home Photo News சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)

சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)

2033
0
SHARE
Ad

சிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய 12-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்

உலகத் தமிழாசிரியர் பேரவை மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழம் (SUSS) ஆகிய அமைப்புகளோடு இணைந்து சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், இந்த மாநாட்டை ஏற்று நடத்துகிறது.

சண்முகத்துக்கு மாலை அணிவிக்கும் சிங்கை தமிழாசிரியர் சங்கத் தலைவர் சி.சாமிக்கண்ணு

உலகம் எங்கிலும் இருந்து சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் இந்த 3 நாள் மாநாட்டில் மலேசியாவிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

சுமார் 45 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

“பன்மொழிச் சூழலில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்” என்ற தலைப்பை மாநாட்டுக் கருப்பொருளாகக் கொண்டு இந்த மாநாடு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சண்முகத்திற்கு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவருமான சி.சாமிக்கண்ணு மாலை அணிவித்து சிறப்பித்தார்.மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பேராளர்கள்

மாநாட்டின் இடையே கலைநிகழ்ச்சிகள்

சிங்கை சமூக அறிவியல் பல்கலைக் கழகத் தலைவர் பேராசிரியர் சியோங் ஹீ கியாட் உரையாற்றுகிறார்
சி.சாமிக்கண்ணு உரை