Home இந்தியா விஜயபாஸ்கர் பதவி விலகுவாரா? கைது செய்யப்படுவாரா?

விஜயபாஸ்கர் பதவி விலகுவாரா? கைது செய்யப்படுவாரா?

1026
0
SHARE
Ad
எடப்பாடி பழனிசாமி – விஜயபாஸ்கர்

சென்னை – குட்கா விவகாரத்தில் அதிரடியாகக் களமிறங்கிய இந்தியாவின் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) நேற்று 40 இடங்களில் சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி (காவல் துறை தலைமை இயக்குநர்) இராஜேந்திரன், முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து இராஜேந்திரனும் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

விஜயபாஸ்கரை அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றி விட்டு மற்றொருவரை அவருக்குப் பதிலாக நியமித்து நெருக்கடியை முதல்வர் பழனிசாமி தணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப, அமைச்சர் விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் பதவி விலகுவார் என்ற ஆரூடங்களும், விரைவில் கைது செய்யப்படலாம் என்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன.