நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த முடிவையும் கமல் தற்காத்தார். இரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க காட்டும் ஆர்வத்தை வாக்களிப்பதில் காட்டவில்லை என்பதால்தான் சில முடிவுகள் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகக் கிடைக்கின்றன என்றும் கமல் கூறினார்.
அதன்படி 85-வது நாளைத் தொட்டிருக்கும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் புதிதாக உள்ளே நுழைந்திருக்கும் விஜயலட்சுமியும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.
இப்போதெல்லாம் முன்கூட்டியே யார் வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் கசிந்துவிடுகின்றன. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் சென்றாயன் வெளியேற்றப்படுவார் என சமூக ஊடகங்களில் பலர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
அதன்படியே இரசிகர்களால் சென்றாயன் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். பின்னர் சென்றாயனுடன் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே உள்ள மேடையில் கமல் சிறிது நேரம் அளவளாவினார்.