Home வணிகம்/தொழில் நுட்பம் அலிபாபாவின் ஜேக் மா பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் – தலைவராக நீடிப்பார்

அலிபாபாவின் ஜேக் மா பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் – தலைவராக நீடிப்பார்

1086
0
SHARE
Ad

பெய்ஜிங் – சீனாவின் மிகப் பெரிய பணக்காரரான அலிபாபா நிறுவனத்தின் இணை தோற்றுநர் ஜேக் மா நாளை திங்கட்கிழமை முதல் தனது நிறுவனப் பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளார். தனது நிறுவனங்கள் தொடர்ந்து யாருடைய தலைமையின் கீழ் எவ்வாறு நடத்தப்படும் என இந்த வாரம் அறிவிக்கவிருக்கும் ஜேக் மா எனினும் தொடர்ந்து தலைவராக நீடிப்பார்.

1999-ஆம் ஆண்டில் அலிபாபா குழுமத்தைத் தோற்றுவித்த ஜேக் மா 2013-இல் தலைமைச் செயல்முறை அதிகாரி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் அடுத்த கட்டமாக எதிர்வரும் வாரத்தில் மற்ற பொறுப்புகளில் இருந்து விலகினாலும் தொடர்ந்து நிறுவனத் தலைவராக இருந்து தனது நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருவார்.