Home நாடு அன்வார் போட்டியிடும் தொகுதி சுங்கைப் பட்டாணியா?

அன்வார் போட்டியிடும் தொகுதி சுங்கைப் பட்டாணியா?

962
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதி நாளை புதன்கிழமை (12 செப்டம்பர்) அவர் ஹாங்காங்கிலிருந்து நாடு திரும்பியதும் அறிவிக்கப்படும்.

அவர் போட்டியிடவிருக்கும் தொகுதி இதுவரையில் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும், நாளுக்கு நாள் எந்தத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற பரபரப்பான ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆகக் கடைசியான தகவல்களின்படி கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி அல்லது அலோர்ஸ்டார், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட்டிக்சன் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அநேகமாக இறுதி முடிவின்படி சுங்கைப்பட்டாணி தொகுதியிலேயே அன்வார் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சுங்கைப்பட்டாணி தொகுதியின் நடப்பு உறுப்பினரான பிகேஆர் கட்சியின் ஜொஹாரி அப்துல் தனது தொகுதியை அன்வாருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

ஜொஹாரி கெடா மாநிலத்தின் குருண் சட்டமன்ற உறுப்பினருமாவார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக தொகுதி ஒன்றில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் நுழைவேன் என அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.